×

ஞானத்தமிழ் தந்த ஔவையார்

மீரா பஜனின் மேன்மை

அரசக்குடும்பத்தின் தொல்லைகள் தாளாது பல இடங்களுக்கு சென்று, இறுதியில் கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தாள். அங்கு தன்னை கோபியர்களில் ஒருவராக உணர்ந்தாள். வட இந்தியா முழுதும் யாத்திரையாக சென்று தம் கருத்துகளை பாடல்கள் மூலம் வட்டார மக்கள் மொழியான விரஜ மொழியில் பரப்பினாள். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய பக்திப்பாடல்கள் “மீரா பஜன்” என்று இன்றும் பிரசித்தமாக இருக்கின்றன.

கண்ணன்மீது கொண்ட பிரேமத்தை விவரிக்கும் இந்த உணர்ச்சிகரமான, உயர்ந்த ஆன்மிகத் தத்துவங்கள் நிறைந்த பாடல்கள் மீராவுக்கே உரித்தான தனிச்சிறப்பு. இறுதிக்காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் முன்பு பாடிக்கொண்டே கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்தாள். உறுதியோடும் வைராக்கித்தோடும் நின்றால், எத்தனை சோதனைகள் வந்தாலும் கடந்து இறைவனை காதலனாக- கணவனாக அடையலாம் என்ற உறுதிக்கு சான்றுதான் மீரா.

ஞானத்தமிழ் தந்த ஔவையார்

ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர்.
விநாயகருக்கான தமிழ்ப் பாடலான,
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”

– என்ற பாடலை நினைத்தாலே அவ்வையார் நினைவுக்கு வந்து விடுவார். விநாயகப் பெருமான் தோற்றம், யோகாசன மூச்சுப் பயிற்சி முதலான செய்திகளோடு யோக சாஸ்திரத்தின் அருமையை அணுஅணுவாக விளக்கும், விநாயகர் அகவலை கேட்காமல் யார் இருக்கமுடியும்?
ஆனால், ஔவையார் ஒருவர் அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விநாயகர் அகவல் பாடியவர் வேறு. இதனைப் பாடிய ஔவையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழச் செய்கின்றன. புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய ஔவையார் வேறு ஒருவர். சங்ககாலப்புலவர். அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன.எது எப்படியோ சமயநெறி வளர்த்த மங்கையர்களின் வரிசையில் நம் மனதில் விநாயகர் அகவலும் அதைப் பாடிய ஔவையாரும் மங்கையர் குல மாணிக்கங்களில் ஒருவர் அல்லவா!

கூரத்து ஆண்டாள்

ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் காஞ்சிபுரத்துக்கு அருகில் அமைந் துள்ள கூரம் என்ற சிறு கிராமத்தில், அவதரித்தார். அவர் ஒரு சிற்றரசர். பிரமச்சாரி விரதம் கடைப்பிடிக்க எண்ணியிருந்த அவருக்கு திருமணம் நடக்க ஒரு சம்பவம் காரணமாகி அமைந்தது. நள்ளிரவில் வழக்கமாக நகர சோதனைக்குச் சென்றபோது, ஓர் நாள் ஓர் அந்தணர் வீட்டில் சிலர் உரக்க பேசுவதும், பின் அழுதுகொண்டிருப்பதையும் கண்டு, அந்தவீட்டுககு அருகில் நின்று காது கொடுத்துக் கேட்டு விஷயங்களை அறிந்தார்.

மறுநாள் அவர்களை அழைத்து விசாரித்தார். அதன்படி அவ்வீட்டில் வாழும் அந்தணர் குடும்பத்துக்கு ஒரு மகள் இருந்ததையும், அவள் மணமுடிக்கும் வயதில் இருப்பதையும், ஆனால் ஜோதிடர்கள் சிலர், அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மணமகனுக்கு உடன் மரணம் சம்பவித்து விதவை ஆகிவிடுவாள் என்பதால், துக்கமுற்ற பெற்றோர்கள் அவளை, ஊர்ப்பழிக்கு அஞ்சி, கொன்றுவிட உத்தேசித்து அதற்கான நாளையும் குறித்துள்ளனர் என்றறிந்தார்.

அவளைக் கொன்று பெண்பாவம் தேடிக்கொள்ள வேண்டாம். அவளை தானே மணமுடிக்கச் சித்தமாய் இருப்பதாகவும் கூறி, ‘ஆண்டாளை’ மணந்து கொண்டார்.அரசு பதவியும், உயர்ந்த செல்வமும் நிறைந்து விளங்கிய போதிலும், ஒருதுறவியாகவே வாழ்ந்து தன் செல்வங்களை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு உதவி வந்தார். ஒருநாள் அனைத்தையும் துறந்து ஸ்ரீ ரங்கம் வந்து ராமானுஜரின் சீடராக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அருள் ஜோதி

Tags : Gnanathamil Danta Auwayyar ,Meera Bhajan ,Brindavana ,Kannan ,Copiers ,North India ,
× RELATED சுயமரியாதைக்கு சொர்க்கமே கூலி..!