×

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது.. ஐகோர்ட் கிளை அதிரடி…

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, தவெக அரசு வழங்கிய அரசு வேலை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. இதனால் கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு முதல்வர் விஜய் வழங்கிய பணி நியமன ஆணை உத்தரவுகள் ரத்தாகி இருக்கிறது.

ஐகோர்ட் மதுரை கிளையின் இந்த அதிரடி உத்தரவு முதல்வர் விஜய்க்கும், அவரது தலைமையிலான தவெக அரசுக்கும் பெரும் பின்னடைவாக மாறி இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் நிகழ்கிறது, விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடியுமா? அதே போல சிவகாசியில் அவ்வப்போது நிகழும் வெடிவிபத்துகளில் ஏராளமானோர்பலியாகின்றனர், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என நீதிமன்றம் விதிகளை மீறி இருக்கும் விஜய் அரசை பார்த்து சாட்டையை சுழற்றி இருக்கிறது.

கருணை அடிப்படையில் பணியை பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளித்தது ஏன் என் தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு சாதாரணமான அரசு வேலையே வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பு வாதம் வைத்தது. அதற்கு “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என நீதிபதிகள் கூறினர். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு திறன் வளர் பயிற்சி வழங்கி உதவலாமே, அதை விடுத்து சாதாரண அரசு பணியே வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது. அதே போல போகிற போக்கில் அரசு பணிகளை வழங்க கூடாது, எந்த அரசு வேலையாக இருந்தாலும் அதை பெரும் ஒருவர் அதற்காக பாடுபட்டிருக்க வேண்டும் என்று நியாயமான கருத்தை நீதிபதிகள் முன்வைத்து உள்ளனர்.

Tags : Karur ,High Court ,Madurai ,Thavega government ,Chief Minister ,Vijay ,
× RELATED கரூர் நெரிசலில் உயிரிழந்தோர்...