×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.

அதாவது வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,840க்கும் விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

வார இறுதி நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,400க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் நிகழவில்லை.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில்...