சூலூர், ஜூலை. 27: சூலூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழகிய பெண் போலீஸ் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை சூலூர் அருகே உள்ள பிகேடி நகரை சேர்ந்த செந்தில்குமார்- சுதா தம்பதி மகன் விசாகன் (15). இவர் பல்லடம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சுதா கோவை மாநகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் விசாகன் சூலூர் விமானப்படை தளத்திற்கு பின்புறம் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் நீச்சல் பழக சென்றார். நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பழகியபோது திடீரென விசாகன் திடீரென நீரில் மாயமானார்.
இதனை அறிந்த நண்பர்கள் சூலூர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், விரைந்து வந்து கிணற்றில் தேடி சிறுவனை சடலமாக மீட்டனர்.சூலூர் போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனின் சடலத்தை பார்த்த அவரது தாய் கதறி அழுத சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
