×

பெண்ணிடம் ரூ.10.7 லட்சம் வாங்கி மோசடி செய்த கார் டிரைவர் கைது

 

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (34). இவரது கணவர் பாஸ்கரன், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2024ம் ஆண்டு கொளத்தூர் தென்பழனி நகரில் உள்ள ஒரு வீட்டை விற்பது சம்பந்தமாக கொளத்தூர் முருகன் நகர் 5வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் தினகரன் (26) என்பவர் ஷாலினி குடும்பத்திற்கு பழக்கமாகி நன்றாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் தினகரன் தனது குடும்ப தேவைக்காக 12 லட்சம் ரூபாய் அவசரமாக தேவைப்படுவதாக கூறியதால், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 11 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஷாலினி ரூ.6.50 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் அதே மாதத்தில் மேலும் ரூ.4.2 லட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தினகரன் மூன்று மாதத்தில் அதை திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்தார்.ஆனால் இதுவரை பணத்தை திருப்பி தராமல் தினகரன் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷாலினி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் தினகரனை கைது செய்துசிறையில் அடைத்தனர்.

 

Tags : Perambur ,Shalini ,Poompuhar Nagar ,Kolathur, Chennai ,Bhaskaran ,
× RELATED குற்றச்சம்பவமே நடக்காத நிலையில்...