சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
