சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
