அமேதி: உத்தரப்பிரதேசத்தில் உரம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள சிந்துர்வா ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட அந்த சரக்கு ரயிலில் 7 பெட்டிகள் உர ஆலைக்கும் சிந்தூர்வா ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தடம் புரண்டன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் இந்தோராமா உர ஆலைக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதமடைந்த தண்டவாளத்தை சரிசெய்து ஆலைக்கான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
