×

காசர்கோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு இருந்தால் குற்றம்: காங். எம்பி கருத்து

காசர்கோடு: கேரளாவின் காசர்கோடில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராஜமோகன் உன்னிதன், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது காசர்கோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அது ஒரு தீவிரமான குற்றமும் குற்றவியல் செயலும் ஆகும்.

நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு மோசமான முயற்சியாகும். இந்த பிரச்னையை ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரமாக மட்டும் பார்க்க முடியாது. இதில் யார் குற்றவாளி எனத் தெரிய வந்தாலும் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ” என்றார்.

Tags : Kasaragod district ,Congress ,Kasaragod ,Kasaragod, Kerala ,Congress Lok Sabha ,Rajamohan Unnithan ,
× RELATED மாணவர் போராட்டத்துக்கு பணிந்தது...