×

மேகதாது பேச்சுவார்த்தைக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை: ​அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

புதுச்சேரி: மேகதாது பேச்சுவார்த்தைக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். புதுச்சேரி அடுத்த கொம்பாக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அளித்த பேட்டி: நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதே மாணவர்களின் எதிர்காலத்துக்கு நிரந்தரத் தீர்வாகும்.

அதற்கு ஒன்றிய அரசின் அதிகாரத்தில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ​நீட் தேர்வுக்கு எதிரான எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, அறவழியில் போராடும் இளைஞர்களை காவல்துறையினர் அச்சுறுத்தவோ, அவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்கவோ கூடாது.

முதல்வர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அது உறுதிசெய்யப்படாத தகவல். இது குறித்து யார் செய்தி பரப்பினாலும் அதை நம்ப வேண்டாம். முதல்வர் கர்நாடகா செல்வதாக இருந்தால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறைப்படி அரசிடமிருந்து வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Vijay ,Karnataka ,Megeda ,Minister ,Rajmohan ,Puducherry ,School Education Minister ,Tamil ,Nadu ,Education Minister ,Kombakam ,
× RELATED 10 இடங்களில் நேற்று வெயில் சதம்...