- திண்டிவனம் நகராட்சி
- திண்டிவனத்தில்
- விழுப்புரம் மாவட்டம்
- சமூக நீதி
- அமைச்சர்
- வன்னி அருசா
- மாவட்டம்
- கலெக்டர்
- ஷேக்…
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திடீரென மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சியில் உள்ள ஆதார் மையத்தில் மின்சாரம் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்சாரம் தடைபட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டம் நடைபெற்ற அரங்கில் மின்சாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
