×

மேகாலயா தேனிலவு கொலையில் மனைவியின் ஜாமீன் ரத்து: 3 வாரத்தில் சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு குஜராத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவர், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சோனம் ரகுவன்ஷிக்குக் விசாரணை நீதிமன்றமும், மேகாலயா உயர் நீதிமன்றமும் ஜாமின் வழங்கின.

இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,’ கைதுக்கான காரணங்களே தெரிவிக்கப்படாததற்கும், குறிப்பாணையில் சிறு எழுத்துப் பிழை இருப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

எனவே, தொழில்நுட்பக் பிழையைக் காரணம் காட்டி சோனத்திற்கு ஜாமின் வழங்கியது தவறானது. சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், சோனம் ரகுவன்ஷி தொடர்ந்து வெளியில் இருப்பது வழக்கின் நியாயமான விசாரணையைப் பாதிக்கும். எனவே, சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது. அவர் இன்னும் மூன்று வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். ’ என்று உத்தரவிட்டனர்.

Tags : Meghalaya ,Supreme Court ,New Delhi ,Raja Raghuvanshi ,Gujarat ,Sonam Raghuvanshi ,
× RELATED வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு...