டெல்லி: டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்து கடைகள், அலுவலகங்களையும் இன்று மாலை 6.30 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள், சேதங்களைத் தவிர்க்க டெல்லி மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
