×

கேரளாவில் பெண்களுக்கான பிங்க் பஸ் சேவை தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாநில அரசின் செயல்100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று பிங்க் பஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிபி ஜான் கலந்துகொண்டு, பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், \\”பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

டெக்னோபார்க் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும். இந்த திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Tags : Kerala ,Thiruvananthapuram ,State Road Transport Corporation ,Kerala State Road Transport Corporation ,Thiruvananthapuram… ,
× RELATED வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு...