டெல்லி: தனது நிபந்தனைகளை நிறைவேற்றினால் உண்ணாவிரதத்தை கைவிட தயார் என ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நிபந்தனை விதித்துள்ளார். ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதி தர வேண்டும். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என சோனம் வாங்சுக் நிபந்தனை விதித்துள்ளார்.
