தொடர்ந்து 2வது நாளாக ஏறுமுகம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது: வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் எகிறியது

சென்னை: தங்கம் விலை சில மாதமாக விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கடந்த 18ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, பவுன் ரூ.1 லட்சத்து 5,080க்கு விற்பனையானது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வார தொடக்கமான நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து5,200க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,760க்கும் விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருவது நகை வாங்குவோர் இடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: