- தெலுங்கு தேசம்
- தமிழ்நாடு ஆசிரியர் மேம்பாட்டு சங்கம்
- சென்னை
- வரதராஜபுரம், தாம்பரம்
- ஜனாதிபதி
- கே. தியாகராஜன்
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நேற்று முன்தினம் தாம்பரம் வரதராஜபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் கட்டாய கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவை இல்லை என்பதை வலியுறுத்தி கல்வி உரிமை சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதை விரைவாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
