×

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

 

சென்னை: சென்னை தியாகராய நகரில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பா.ம.க. சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம் அதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27க்கான 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; தமிழக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் வர பாமகவே காரணம். எங்கள் நிதிநிலை அறிக்கையின் பல திட்டங்களை அரசு பட்ஜெட்டில் அறிவித்தது மகிழ்ச்சி.

2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும். மொத்த பட்ஜெட்டில் 25% வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகிய கால கடன்களுக்கு 10% மானியம் வழங்கப்படும். வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

Tags : PMK Agriculture ,Anbumani Ramadoss ,Chennai ,PMK ,President ,Thyagaraya Nagar, Chennai ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்