புதுடெல்லி: இந்தியாவில் நீதிமன்றங்களில் வாதிடுவதற்கான அகில இந்திய வழக்கறிஞர் தேர்வு கடந்த ஜூன் 7ம் தேதி நாடு முழுவதும் 60 நகரங்களில் 292 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. இந்திய பார் கவுன்சில் நடத்திய தேர்வில் மொத்தம் 1,75,701 பேர் பங்கேற்றனர். இதில் 1,10,909 பேர் ஆண்கள்,64,784 பேர் பெண்கள்,8 பேர் திருநங்கைகள் ஆவர். இந்த நிலையில், அகில இந்திய வழக்கறிஞர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 65.92 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
