×

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி

டெல்லி: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகேடா பார்மாசூடிக்கல்ஸ் இந்தியா நிறுவனம் டெங்குவுக்கு கியூடெங்கா (QDENGA) என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பூசியை போடலாம் என்று தகேடா நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கியூடெங்கா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 2022ல் தயாரிக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது

Tags : Indian Drug Controller ,Delhi ,Takeda Pharmaceuticals India ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது;...