×

மம்தா மருமகனின் கட்சி அலுவலக இடிப்புக்கு தடை: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் மருமகனின் கட்சி அலுவலகம் இடிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பரகனா மாவட்டத்தின் அம்தலா பகுதியில் இயங்கி வந்த மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் முறையான கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறி நேற்று முன்தினம் இடித்து தள்ளியது.

மாவட்ட நிர்வாகம் கூறுகையில், இது தொடர்பாக ஜூன் 30 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அபிஷேக் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரும் ஆஜராவில்லை. இதன் காரணமாகவே கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியது என்று தெரிவித்தது.இடிக்கப்பட்ட அம்தலா கட்டிடம் லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் நிறுவனத்தினுடையது.

வேறு ஒரு வழக்கை விசாரணை நடத்திய போது குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அபிஷேக் பானர்ஜி இருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிலையில் கட்டிட இடிப்புக்கு எதிராக லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த சிறப்பு அமர்வில் மனுவை விசாரித்த நீதிபதி ராஜா பாசு சவுத்ரி அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலக கட்டிடம் இடிப்புக்கு இம்மாதம் இறுதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Mamata Banerjee ,Calcutta High Court ,Kolkata ,High Court ,Abhishek Banerjee ,Amdala ,West Bengal ,South 24 Parganas district ,
× RELATED இந்தியாவில் குடும்பத் தகராறில் 6...