×

மோடியின் மவுனம் ஏற்று கொள்ள முடியாதது அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு பிரதமருக்கு ராகுல்காந்தி, கார்கே கடிதம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் கோயில் நன்கொடை கையாடல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். கோயிலுக்கு நன்கொடை வழங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருட்டால் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால்,அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளரும் பிரதமரின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இத்தகைய ஒரு குற்றத்தின் முன்னிலையில் நீங்கள் மவுனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொறுப்புக்கூறலையும் இழப்பையும் உறுதி செய்வது உங்கள் கடமையாகும். அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்தும், ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கைகளைக் கையாண்ட விதம் குறித்தும் ஒரு சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும்,விசாரணை அறிக்கையின் முடிவுகளையும் அறக்கட்டளையின் கணக்குகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Modi ,Rahul Gandhi ,Kharge ,PM ,Ayodhya temple ,New Delhi ,Lok Sabha ,Rajya Sabha ,Mallikarjun Kharge ,Ram temple ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...