×

நீங்க டிவிகே தானே? கலெக்டரை கலாய்த்த ‘பப்ளிக்’: வைரலாகும் வீடியோ

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா முமுவதும் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பல்வேறு இடங்களில் தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, சுத்தமாக வைத்துக் கொள்ள ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒருவர், ‘‘மாவட்ட கலெக்டரை பார்த்து இங்கு ஐந்து ரூபாய்க்கு பதில் 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. உங்களால கேட்க முடியுமா? என்று திரும்ப திரும்ப கேட்டவர், நான் பப்ளிக் உங்களிடம் கேட்பேன் என்றவர் திடீரென கலெக்டரைப் பார்த்து நீங்கள் தவெக கட்சி நிர்வாகி தானே என கேட்டார். அங்கிருந்தவர்கள், அது கலெக்டர்யா என்று கூறியதும் ஓ அப்படியா என்றவாறே நின்றார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த போதை வாலிபரை அப்புறப்படுத்தினர்.

Tags : TVK ,Kadayanallur ,Tenkasi district ,Kadayanallur taluka ,Tenkasi ,Ranjith Singh ,
× RELATED தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில்...