×

சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குகள் தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யாகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது அவதூறு வழக்கு தானே தொடர முடியும். அதை விடுத்து கலவரத்தை தூண்டுவது, அமைதியை குலைப்பது போன்ற பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? இதை தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரியாஷிடம் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Vinod Surya ,Chennai Central Crime Branch Cyber Crime Police ,Minister ,Ramesh ,Palani ,Vinod ,
× RELATED தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில்...