×

சில்லி பாயின்ட்…

* ஜிம்பாப்வே வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி புலவாயோ அரங்கில் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே 32 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜிம்பாப்வே 20 ஓவரில் 170/6; வங்கதேசம் 19 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்.

* முதல் ஒருநாள் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை நோக்கி பந்தை அபாயகரமாக எறிந்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் ஒழுங்கு நடவடிக்கையாக ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

* மேஜர் லீக் டி20 தொடரின் எலிமினேட்டர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிராக 267 ரன்களை வெற்றிகரமாகத் துரத்தி வாஷிங்டன் ஃபிரீடம் அணி உலக சாதனை படைத்தது. முன்னதாக, டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் 265 ரன்னை சேஸ் செய்திருந்தது. எம்ஐ நியூயார்க் 20 ஓவரில் 266/9 (கேப்டன் பூரன் 33 பந்தில் 106, போலார்டு 25 பந்தில் 64); வாஷிங்டன் ஃபிரீடம் 18.4 ஓவரில் 270/4 (கேப்டன் ஸ்மித் 48 பந்தில் 110*, ஆண்ட்ரீஸ் கவுஸ் 51 பந்தில் 132). இப்போட்டியில் மொத்தம் 51 சிக்சர்கள் விளாசப்பட்டன.

Tags : 2nd T20I ,Zimbabwe ,Bangladesh ,Bulawayo Stadium ,Zimbabwe… ,
× RELATED இறுதிப்போட்டிக்கு முன்னேறிய...