புதுடெல்லி: 20விழுக்காடு எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்தது கைவிட்டு சுத்தமான பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில்; கடந்த 2023ஆம் ஆண்டுக்கு முன் நாட்டின் 30 கோடி இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பழைய வாகனங்களை பயன்படுத்துவோர், E20 பெட்ரோலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாற்றியுள்ளார்.
மேலும், இதன்மூலம், E20-க்கு ஏற்றதாக இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைச் சேதப்படுத்தும் எரிபொருளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். E20 எரிபொருளின் குறைந்தகலோரி மதிப்பு மற்றும் அதனால் கிடைக்கும் குறைவான மைலேஜ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் விலையைக் குறைக்க வேண்டும். இதன் காரணமாக, தரம் குறைந்த அல்லது குறைபாடுகள் கொண்ட ஒரு பொருளுக்கு மக்கள் முழு விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக நேரில் விளக்க உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே பழைய வாகனங்களை பயன்படுத்துவோருக்கு சுத்தமான பெட்ரோல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் E20 பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பிரதமரை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.
