×

செவ்வாய்பேட்டையில் மளிகை கடை பூட்டை உடைத்த மர்மநபர்: மக்கள் சத்தமிட்டதால் ஓட்டம்

 

சேலம், ஜூலை 10: சேலம் செவ்வாய்பேட்டையில் மாதா கோயிலுக்கு சொந்தமான 40 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் சந்திரசுபாஷ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் அவர் கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் மளிகை கடையின் பூட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீடுகளின் ஜன்னல் வழியாக பார்த்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் அந்த மர்மநபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sehwapettai ,Salem ,Mata Koil ,Chandrasubash ,
× RELATED தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்க தடை