×

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்

 

பர்மிங்காம்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடர்களில் முறையே 0-2, 0-4 என்ற கணக்கில் பரிதாபமாகத் தோற்ற உலக சாம்பியன் இந்திய அணி, அடுத்து இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெறும் நிலையில், 2வது போட்டி கார்டிப் (ஜூலை 16), லார்ட்ஸ் (ஜூலை 19) மைதானங்களில் நடக்க உள்ளன.

கில் தலைமையிலான ஒருநாள் அணியில் அனுபவ வீரர்கள் ரோகித், கோஹ்லி இடம் பெற்றுள்ளதால், டி20 தொடரில் அடைந்த படுதோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா: கில் (கேப்டன்), ஷ்ரேயாஸ் (துணை கேப்டன்), ரோகித், கோஹ்லி, இஷான், ராகுல், துபே, வாஷிங்டன், அக்சர், அர்ஷ்தீப், பும்ரா, குர்னூர் பிரார், பிரசித், பிரின்ஸ், குல்தீப்.

இங்கிலாந்து: ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், பட்லர், டக்கெட், ஜோ ரூட், பெத்தெல், சாம் கரன், ஜேம்ஸ் கோல்ஸ், டாவ்சன், வில் ஜாக்ஸ், ரெஹான் அகமது, ஆர்ச்சர், அட்கின்சன், சகிப் மகமூத், அடில் ரஷித், ஜோஷ் டங்.

Tags : India ,England ,Birmingham ,Edgbaston ,T20 ,Ireland ,India… ,
× RELATED இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான...