×

டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது: கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது

 

புதுடெல்லி: இலக்கியத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. இந்த ஆண்டின் ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார். ஞானபீடம் விருது பெறும் 60 வது இலக்கியவாதி வைரமுத்து ஆவார். இதைத்தொடர்ந்து வைரமுத்து ஆற்றிய உரையில்,‘‘ ஞானபீட விருது பெறும் பொழுது கூடுதல் சந்தோஷம் பெறுகிறேன்.

சாகித்ய அகாடமி விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷன், பத்ம என பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த ஞானபீடம் விருது பெறும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த ஞானபீட விருதை தமிழ் சமூகத்துக்கு பகிர்ந்து கொடுக்கிறேன். காகிதம் மற்றும் வாசகர்கள் இவர்கள்தான் ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஆனால் இது இரண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இலக்கியத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

Tags : Poet Vairamuthu ,Delhi ,New Delhi ,India ,Vairamuthu ,Union Minister ,Karan Singh ,
× RELATED வியட்நாம் படகு விபத்து: ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்த LAVA