×

ரூ.19,000 கோடி முதலீட்டில் மபியில் செமி கண்டக்டர் ஆலை: முதல்வர் மோகன் யாதவ் தகவல்

 

போபால்: மத்தியபிரதேசத்தில் செமி கண்டக்டர் துறையில் ஸ்பெயினின் சப்மர் குரூப் ரூ.19,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடந்த எம்பி டெக் குரோத் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய மோகன் யாதவ், “ மத்தியபிரதேசம் ஒரு காலத்தில் விவசாயம், சுரங்கத்தொழில் மற்றும் வனத்துறைக்கு மட்டுமே பெயர் பெற்றதாக இருந்தது.

ஆனால் தற்போது பாதுகாப்பு துறை முதல் டிரோன்கள் வரை, அறிவியல், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொழில்தடங்கள் வரை எதிர்கால நோக்குடைய துறைகள் வரை அனைத்திலும் வேகமாக முன்னேறி வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக மத்தியபிரதேசத்தில் உள்ள செமி கண்டக்டர் துறையில் ஸ்பெயின் நாட்டின் சப்மர் குரூப் நிறுவனம் ரூ.19,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags : Chief Minister ,Mohan Yadav ,Bhopal ,Spain ,Sapmar Group ,Madhya Pradesh ,MP Tech Growth Conclave ,Bhopal, Madhya Pradesh ,
× RELATED தமிழ்நாட்டில் 2 நெடுஞ்சாலைகளுக்கு...