கடற்கரை சாலையில் அதிவேகத்தில் சென்ற கார் இணையத்தில் வீடியோ வைரல்

புதுச்சேரி, ஜூலை 13: புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடையை மீறி கார் ஒன்று கடற்கரை சாலைக்குள் நுழைந்து அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

தடையை மீறி வாகனம் ஓட்டிய நபரை வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அடையாளம் கண்டு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடற்கரை சாலையில் இரவு நேர போலீஸ் கண்காணிப்பு, ரோந்து மற்றும் சிசிடிவி கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: