×

உலக கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி!

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நார்வே அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த அபார கோலால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 3வது நிமிடத்தில் பெல்லிங்ஹாம் இங்கிலாந்து அணிக்கான வெற்றி கோலை அடித்தார். நடப்பு தொடரில் இது அவரது 6வது கோலாகும். முன்னதாக, ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் நார்வே வீரர் ஆன்ட்ரியாஸ் ஷெல்டரப் முதல் கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும், முதல் பாதி முடிவதற்குள் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. ஆனால், நார்வே உதைத்த பந்து மைதானத்தின் கேமரா ஒயரில் பட்டு இங்கிலாந்து வீரரிடம் சென்றது. விதிகளின்படி ஆட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என்றாலும், நடுவர்கள் இதை கவனிக்காததால் இங்கிலாந்து அடித்த கோல் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நார்வே அணியின் துரதிர்ஷ்டம் இத்துடன் முடியவில்லை; 56வது நிமிடத்தில் நார்வே மற்றொரு கோல் அடித்தபோதும், நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் ஃபவுல் செய்ததாகக் கூறி, ‘விஏஆர்’ தொழில்நுட்பம் மூலம் அந்த கோல் மறுக்கப்பட்டது.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய நார்வேயின் முக்கிய வீரர் ஹாலண்டை, ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் இங்கிலாந்து டிஃபெண்டர்களும், கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டும் சிறப்பாக தடுத்து முடக்கினர். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அங்கு அவர்கள் அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்வார்கள்.

Tags : World Cup ,England ,Norway ,2026 World Cup football ,Jude Bellingham ,Hard Rock Stadium ,Miami City ,
× RELATED நைஜீரியாவில் பயங்கரவாதிகளால்...