×

லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ கைது

திருப்புவனம்: திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சத்தியமூர்த்தி (59). சிவகங்கை அருகே சீரம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மகன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பெண் வீட்டார் பிரச்னை செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்எஸ்ஐ சத்தியமூர்த்தி இருவரையும் சமரசம் பேசி முடிப்பதாக கூறி தெய்வேந்திரனிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டு ரூ.5 ஆயிரத்தை வாங்கியுள்ளார்.

மீதி ரூ.3 ஆயிரத்தை எஸ்எஸ்ஐ கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து தெய்வேந்திரன், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கீழடி அருகே ஒரு ஓட்டலில் வைத்து சத்தியமூர்த்தியிடம் தெய்வேந்திரன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் எஸ்எஸ்ஐ சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.

Tags : SSI ,Tirupwanam ,Sathyamoorthy ,Tirupwanam Police Station ,Devendra ,Seerampati ,Sivaganga ,Satyamoorthy ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை