சென்னை: தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திபட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த சின்னபொண்ணு (55) குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். லேசான காயமடைந்த சகுந்தலாவிற்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
