×

700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகின்றன 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,900 இடங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்களில் 850 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 3050 இடங்கள், ஒரு ஒன்றிய அரசு நிறுவனத்தில் 150 இடங்கள் என மொத்தம் 13,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

இவற்றில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக 4,247 இடங்களும், ஒன்றிய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 97 இடங்களும் என 4344 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்படும். இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள 4750 எம்.பி.பி.எஸ் இடங்களில் 50 சதவீதம் முதல் 65 சதவீதம் இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டிருப்பதே சட்ட விரோதம் ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவது இயல்பானது தான் என்பதால், அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : MBPS ,Anbumani ,Chennai ,Bhamaka ,President ,Tamil Nadu ,
× RELATED மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க கோடை...