×

தமிழிசையை இழிவுபடுத்தியவர் கைது

சென்னை: சென்னை சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணை பிரிவில், சென்னை மத்திய மாவட்ட பாஜ தலைவர் கிரி அளித்த புகாரில், பாஜ மூத்த தலைவர் தமிழிசையின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான கருத்துகள் மற்றும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிபி, சிசிடியில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புகாரில் தெரிவிக்கப்பட்ட யூஆர்எல்களை ஆய்வு செய்ததில் சரவணா நாச்சிமுத்து என்ற முகநூல் கணக்கில், தமிழிசையை மிகவும் ஆபாசமாகவும், இழிவான திரிபுபடுத்தப்பட்ட படங்களையும் வெளியிட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த கணக்கு பழனியை சேர்ந்த நாச்சிமுத்து (46) என்பவரால் போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் கைது செய்து, நேற்று சைதாப்பேட்டை 11வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tamilisai ,Chennai ,Chennai Central District BJP ,President Giri ,Social Media Investigation Unit ,Chennai Cyber Crime Police Station ,BJP ,
× RELATED மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க கோடை...