×

கடந்த 7 நாட்களில் தமிழகம் முழுவதும் 949 ரவுடிகள் கைது: தலைமறைவு குற்றவாளிகள் 2,385 பேர் சிக்கினர்

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு மேற்பார்வையில், கடந்த 1ம் ேததி முதல் 7ம் தேதி வரை மாநிலம் முழுவதும், அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் மாநகரங்கள், மாவட்டங்களில் ரவுடிகள் உள்பட மொத்தம் 24,025 பேரின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களின் நடவடிக்கை ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 949 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான 2,385 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Anbu ,
× RELATED மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க கோடை...