×

மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தல்: 4 பேர் கைது; 420 மாத்திரை பறிமுதல்

 

தாம்பரம்: மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்திவந்த 4 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி, மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி,தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வாளர் செல்லதுரை தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்திவந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இறங்கி இதன்பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் திருப்பதி – பூந்தமல்லி வழியாக முடிச்சூர் பகுதியில் உள்ள அறைக்கு வந்தடைந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் கண்காணித்து தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நின்றிருந்த முடிச்சூர், அட்டை கம்பெனி பகுதியை சேர்ந்த சக்தி (எ) சக்திவேல் (28) கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. இதுபோல், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (எ) கருக்கா (26), மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த ரூபன் (எ) கோணி (20) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளது. பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (26) கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 420 போதை மாத்திரைகள் மற்றும் போலி கை துப்பாக்கி, 3 பட்டாகத்திகள் மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் சிரிஞ்சுகள், 6 ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், கடத்தல் பின்னணியில் உள்ள கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.

Tags : Mumbai ,Chennai ,Tambaram ,Tambaram police ,Municipal ,Commissioner ,Prem Anand Sinha ,Municipal Police Commissionerate… ,
× RELATED சிறை உளவியலாளர் பணியிடங்கள் – 6 மாதத்திற்குள் நிரப்ப உத்தரவு