புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அமைச்சர்களுக்கு புதிய கார்கள் வாங்க ஆளுநர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் பயன்படுத்திய கார்களையே, தற்போது ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் பயன்படுத்தினால், கூடுதல் காரை திரும்பப் பெறவும் துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
