×

இந்திய விஞ்ஞானிகள் அசத்தல் நஞ்சுக்கொடி செயல்பாட்டை மறுஉருவாக்கம் செய்யும் சிப்

புதுடெல்லி: தாயின் கருவில் உள்ள குழந்தையின் முதல் உயிர்காக்கும் அமைப்பாக நஞ்சுக்கொடி செயல்படுகிறது. இது கருவுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கழிவுப் பொருட்களை நீக்குகிறது. வளரும் கருவை பாதுகாத்து, கர்ப்பத்தை தக்கவைக்க அவசியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியை நேரடியாக ஆய்வு செய்வது கடினம் என்பதால், இது குறித்து மிகக் குறைவாக புரிந்து கொள்ளப்பட்ட மனித உறுப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், மும்பை ஐஐடி மற்றும் ஐசிஎம்ஆர் தேசதிய மகளிர் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை மறுஉருவாக்கம் செய்யும், நஞ்சுக்கொடி சிப் தளத்தை உருவாக்கி உள்ளனர். இந்த ஆய்வு பயோபேப்ரிகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய பேராசிரியர் தீபக் மோடி கூறுகையில், ‘‘நஞ்சுக்கொடி தாய்க்கும், குழந்தைக்கும் இடையே வாயிற்காப்பாளராக செயல்படுகிறது. இதன் செயல்பாடுகளை சிப்பில் மறுஉருவாக்கம் செய்வதன் மூலம், கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடிய மருந்துகள் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை விலங்குப் பரிசோதனைகள் இன்றி, மிகத் துல்லியமாகச் சோதித்துப் பார்க்க முடியும். கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற கர்ப்ப கால சிக்கல்களை ஆழமாக புரிந்துகொள்ளவும், புதிய விஷயங்களை கண்டறியவும் இது உதவும். எதிர்காலத்தில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், பாதுகாப்பான மருந்துகளை உருவாக்கவும் உதவும்’’ என்றார்.

Tags : New Delhi ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால...