×

வங்கதேசத்தில் அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பல் சிக்கியது: உ.பி தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் அதிரடி

லக்னோ: வங்கதேசத்தில் அச்சிடப்பட்டதாக கூறப்படும் இந்திய போலி ரூபாய் நோட்டுக்களை ஒரு கும்பல் பெற்று மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் மூலமாக உத்தரப்பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கு விநியோகித்து வருவதாக உளவுத்துறை மூலமாக தீவிரவாத எதிர்ப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த 2024ம் ஆண்டு ரூ.2லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாயுடன் முகமது சுலைமான் அன்சாரி மற்றும் அவரது கூட்டாளி இத்ரிஸ் ஆகியோர் வாரணாசியில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு போலி ரூபாய் நோட்டுக்களை விநியோகித்ததாக கூறப்படும் ஜாகிர் என்பவரை தீவிரவாத எதிர்ப்பு படையினர் மால்டாவில் கைது செய்தனர்.

Tags : Bangladesh ,Lucknow ,Anti-Terrorism Squad ,Uttar Pradesh ,West Bengal ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால...