×

பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

 

மதுரை, ஜூலை 3: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி இயக்கப்படும் அரசு பஸ் ஒன்றில் அவுட் போஸ்ட் பகுதியில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பஸ்சில் போதிய இடவசதி இல்லாத நிலையில், அடுத்த பேருந்தில் வாருங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அறிவுறத்தியும் அதனை ேகளாமல் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘படிக்கட்டில் பயணிப்பதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணம் மாணவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், விபத்து ஏற்பட்டால் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களும் பாதிக்கப்படுவர். எனவே, அரசு பஸ்கள் இயக்கப்படும்போது தானியங்கி கதவுகளை கட்டாயம் மூடி இயக்கும் நடைமுறையை போக்குவரத்துக் கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட ேவண்டும்’’ என்றனர்.

 

Tags : Madurai ,Aritapatti ,Madurai district ,Periyar ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...