×

நெற்பயிரை மிதித்து சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு

 

கிருஷ்ணகிரி, ஜூலை 3: கிருஷ்ணகிரி அடுத்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(63). அவதானப்பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவர்களுக்கிடையே நெக்குந்தியில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி, பிரச்னைக்குரிய நிலத்தில், பெரியசாமி பயிரிட்டிருந்த நெற்பயிரை பூபதி மற்றும் அவருடன் சென்ற சேகர் ஆகிய இருவரும் மிதித்து சேதப்படுத்தி உள்ளனர். இதை தட்டி கேட்ட பெரியசாமியையும் மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து, பெரியசாமி அளித்த புகாரின் பேரில், கே.ஆர்.பி., டேம் போலீசார், பூபதியை மிரட்டி, நெற்பயிரை சேதப்படுத்திய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Periyasamy ,Nekkunthi ,Bhupathi ,Avadhanapatti ,Bhupathi… ,
× RELATED போச்சம்பள்ளி பகுதியில் புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி