சென்னை: முதல்வர் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை, அமைச்சர் வெங்கடரமணன் நேற்று தொடங்கி வைத்தார்.
இம்முகாம்கள் மாணவர்களின் பார்வைக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த உதவும். மாணவர்களுக்கு கண் பரிசோதனை, தேவையுள்ளவர்களுக்கு கண்ணாடி வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
