நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் உதவியாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அமர்வு, உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள், தட்டச்சர்கள், பதிவாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விதிகளின்படி, உரிய தகுதியை பெறாத நிலையில் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த 17 ேபரின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வு நடைமுறைகளில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்ததன் மூலம், பிற தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும். பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி தேவையில்லாமல் விதிகளை தளர்த்தியுள்ளனர் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: