- உலக இரத்த தானம் நாள்
- திண்டிகுல் ஜி.எச்
- திண்டுக்கல்
- திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- டீன் ஸ்ரீ சரவணன்
- டிஆர்ஓ ஜெயபாரதி
- உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம்…
திண்டுக்கல், ஜூலை 1: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக ரத்த தான தின விழா கொண்டாடப்பட்டது. டீன் ஸ்ரீசரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டிஆர்ஓ ஜெயபாரதி பேசியதாவது: உலக குருதி கொடையாளர்கள் தினம் ஜூன் 14ம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் சிற்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மனிதநேயத்தின் ஒரு துளி ரத்தம் கொடுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள் என்ற கருப்பொருளை வலியுறுத்தி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரத்த தானம் அனைவரும் வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து நடந்த ரத்ததான முகாமில் அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் ரத்ததானம் வழங்கினர். பின்னர் டிஆர்ஓ ரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் முத்துராஜ், நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமரன், செந்தில்குமார் மற்றும் ரத்த வங்கி குழுவினர், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
