×

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு: 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்

புதுடெல்லி: புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் முப்படைகளிலும் 40 ஆண்டுகள் உயரிய அனுபவம் பெற்றவர். ஜெனரல் உபேந்திர திவேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் 31வது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார். 1986ல் ராணுவத்தில் சேர்ந்த இவர், முப்படைகளிலும் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.

புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் தென்மேற்கு பிரிவு மற்றும் தெற்கு பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். இதன் மூலம் மேற்கு எல்லைப் பகுதியில் 2 செயல்பாட்டு பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய அரிதான சிறப்பை பெற்றவர் என பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டி உள்ளது. தனது 40 ஆண்டு கால ராணுவ பணியில், செயல்பாட்டு, திறன் மேம்பாடு மற்றும் நிறுவன ரீதியான துறைகளில் பரந்த அனுபவத்தை பெற்றுள்ளார்.

இது ராணுவத்தின் போர் செயல்திறன் மற்றும் நீண்ட கால மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.  கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இவரது தலைமையிலான சிறப்பு பிரிவு உயர்மட்டத்திலான செயல்பாட்டு தயார்நிலை பணிகளை கவனித்தது. பாலைவனப் பகுதி, மேற்கு போர்களத்தில் தலா ஒரு கவச படைப்பிரிவுக்கும் ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படைக்கும் தலைமை தாங்கி உள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரலாக ராணுவத்தின் முதன்மையான தாக்குதல் பிரிவுகளில் ஒன்றான சுதர்ஷன் சக்ரா படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி உள்ளார். இந்திய எல்லையில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் தீரத் சேத் பொறுப்பேற்றுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

* விடைபெறும் நாளில் வீரர்களுக்கு அஞ்சலி
ராணுவ தலைமை தளபதி பதவியிலிருந்து விடைபெறும் நேற்றைய இறுதி நாளில் ஜெனரல் உபேந்திர திவேதி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டின் சேவையில் தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் துணிச்சல், வீரம், உன்னத தியாகம் ஆகியவற்றை போற்றிய அவர் கடந்த 2 ஆண்டுகளில் ராணுவம் அனைத்து முனைகளிலும் தனது தயார்நிலையை தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Tags : Dheeraj Seth ,New Delhi ,General ,Upendra Dwivedi ,General… ,
× RELATED மழை பெய்யும் வரை காத்திருங்கள்...