×

பைக்கில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி

 

நெல்லை,ஜூன் 29:நெல்லை அருகே பைக் நிலை தடுமாறியதில் தவறி கீழே விழுந்த கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துமாரி மகன் இசக்கி (19). இவர் நெல்லையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறை நாட்களில் சென்ட்ரிங் தொழிலுக்கும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்ட்ரிங் வேலைக்கு சென்றுள்ளார்.

அன்று மதியம் வீட்டில் சாப்பிடுவதற்காக தனது பைக்கில் சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கொம்பன்குளம் பகுதியில் பைக் நிலை தடுமாறியதில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே மகன் இசக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

Tags : Nellai ,Muthumari ,Isakki ,Krishnan Kovil Street, Sathankulam ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று