யூடியூப் மூலம் மாமியார் பிரசவம் பார்த்த ஐடி பெண் ஊழியர் பலி

பெருந்துறை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே புஞ்சை தளவாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் குழந்தைசாமி (36), சசிகலா (32). இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் சசிகலா கர்ப்பம் அடைந்தார். யூடியூப் வீடியோ மூலமே இயற்கையான முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு கடந்த 24ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே மாமியார் யூடியூப் மூலம் பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்தது. நஞ்சுக்கொடி வெளியேறாததால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படவே ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். இதையடுத்து 25ம் தேதி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சசிகலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: