சென்னை: மாற்று கட்சி எம்எல்ஏக்கள் பலரை ஏற்கனவே விலைக்கு வாங்கியுள்ள நிலையில் மதிமுக எம்எல்ஏக்களையும் வாங்க விஜய் தூண்டில் போட்டுள்ளார் என்று பாஜ செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தவெக அரசை தனிப்பெரும்பான்மை கொண்ட அரசாக மாற்ற முதல்வர் துடியாய் துடிக்கிறார். ஏற்கனவே மாற்று கட்சி எம்எல்ஏக்களை பலரை விலைக்கு வாங்கியுள்ள நிலையில் மதிமுக எம்எல்ஏக்களையும் வாங்க திட்டம் போட்டுள்ளார்.
திமுக சின்னத்தை கடன் வாங்கி போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏக்களை வாங்க விஜய் தூண்டில் வீசியிருக்கிறார். 2 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்தால் வெற்றிபெற வைப்பதாக விஜய் கூறியதாக வைகோ பேசியுள்ளார், முதல்வர் விஜய்யின் செயல் குதிரை பேரம் இல்லை அல்லாமல் வேறென்ன? விஜய் இதை மறுக்கவில்லை என்றால் பேரம் நடத்தியது உண்மை என்பது தெளிவாகி விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
